Wednesday 20 November 2013

கற்பனையில் விரிந்த
எண்ணங்கள்
வலையை பின்னிக்கொண்டு
மீள விடாது
என்னை சிறைப்படுத்த .........
மீண்டு எழ எத்தனித்தும்
பிடித்து இழுக்கும்
பார்வை ஒன்றே போதும்
என்றும் என்னை உயிர்பிக்க ..

நம்பிக்கை நங்கூரமிடுகிறது
என்னுள்
நிழல்கள் கூட
நிஜமாய் மாறுமென ....

Tuesday 30 July 2013


எழுதி எழுதி களைத்தும் 
நிரப்படாதது ...
எனது விடைத்தாள் .
கிழித்தெறிந்து போட்ட 
உன் மௌனம் .

என் கவிதைகள் 
எதுவும் உன்னிடம் 
பேசிவிடப்போவதில்லை 
அவற்றை நீ 
பார்க்காதவரை .

மறக்க நினைத்து 
அர்த்தமற்று போகின்ற 
என் ஒவ்வொரு செயல்களும் 
மறுபடி புதைக்கின்றன
உன் நினைவு  
நந்தவனத்தில் .

உன்னை 
நினைக்க ...நினைக்க 
என் தலையணை 
ஈரம் மட்டும் 
குறைவதாய் இல்லை .

கால்கள் சோர்வுற ...
கண்கள் வலிக்க... 
காத்திருந்த பொழுதுகள் .
உன் புரிதல் இல்லாத 
வெறுமனே தரிசனம் 
செய்துவிட போவதில்லை 
ஒன்றும் .

போதுமானதாய் இருக்காதது 
உன் சந்திப்பு .

விரும்பிய பொருள்கேட்டு 
வீரிட்டு அழும்குழந்தையாய் 
மண்ணில் கிடந்தது 
அரற்றி புரண்டு 
கத்தலாம் போலிருக்கு ...
வரப்போகாத 
உன் வருகையை எண்ணி .

---------------------------------பாரதிபிரியன் 



அந்த முதல் சந்திப்பு ...............
உன்னை முதன்முதல் 
நேரில்காணும் ஆவலில் 
எங்கு சந்திக்கலாம் என்கிறேன் .

தோழி ஒருத்தியின் 
திருமண வரவேற்பிற்கு 
மாலை வேளையில் 
வருவதாய் சொன்னாய் .

இடம் எது  என தெரியாமல் 
நீ சொன்ன தகவலில் 
ஊரில் உள்ள மண்டபங்களில்லெல்லாம் 
சுற்றித்திரிந்து ..
கடைசியில் வந்து சேர்ந்தேன் .

உனக்கு நினைவில் இல்லாத 
மண்டபத்தின் பெயரால் 
இத்தணை அலைகழிப்பு ...
ஆர்வத்தை இன்னும் 
அலைபோல் ஆர்பரிக்கச்செய்தது .

 ----------------------------------பாரதிபிரியன் 


Monday 29 July 2013

நினைவுகளை 
வார்த்தைகளால் 
பதிக்க 
நான் செய்யும் 
முயற்சி .

இருள் மூடிய வேளையில் 
தூக்கம் வராமல் புரண்டு ...
உறுத்தியதால் 
எழுதின வரிகள் .

எழுத முற்படுகையில் 
மீண்டும் மூழ்கிப்போகிறேன் 
அந்த ஆரம்ப காலத்து 
நினைவுகள் . 

முதல் பேச்சு...........
அறிமுக வார்த்தைகள் ...
முகம் தெரியாத 
குரல் மட்டுமே பதிந்த 
அந்த நாட்களின் 
பரவச பொழுதுகள் . 

சோர்வும்...........
நிம்மதியின்மையும்...
மனதில் பதிந்து 
என்னை வாட்டுகையில் 
உன் உரையாடல் 
என்னை மீண்டும் புதுபிக்க 
சிலிர்த்து எழுகிறேன் . 

நான் சொன்னேன் 
உண்மை தான் ...
உன்னை நேரில் 
சந்திக்க மாட்டேன் .
உன் நோக்கம்....
உன் கனவு பூர்த்தியாகாமல்.

எனது வாழ்வு ..
உன் மின்னஞ்சல் முகவரியும் ..
முகநூலில் உன் புகைப்படமும் 
காணும் வரை 
நிச்சயம் 
நிதானமாய் இருந்திருக்கும் .

உன்னுடன் உரையாடுகையில் 
நீ உயரவேண்டும் 
என்ற தாக்கமும் 
உன் நலனில் 
அக்கறையும் மிகுந்தது 
உண்மை .
உன் புகைப்படத்தை காணும்வரை ..

பிறகு...........
நேரில் பார்க்க ..பார்க்க ..
உன்னோடு பயணிக்க 
உன்னோடு நேரில் 
உணவருந்தும் போதெல்லாம் .... 
நீ எனக்கானவள் 
என உள்மனம் 
என்னை உசுப்பேற்றியது . 

------------------பாரதிபிரியன்